fbpx

“பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலையின் முன் வைக்கப்பட்ட கண்ணாடி..” – சுவாரசியமான காரணம்.!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி சிலையை பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது ராமர் சிலை திறக்கப்பட்ட பின் அதற்கு கண்ணாடி காட்டப்பட்டது. மேலும் கண்களில் மையிட்டனர். இது தொடர்பான சுவாரசியமான கருத்து ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்தத் தகவலின் படி புதியதாக திறக்கப்படும் சிலைகளை திருச்சிலைகள் என்று தான் அழைப்பார்களாம்.

மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்து பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு தான் தெய்வத்தின் சக்தி சிலைகளுக்கு வந்து தெய்வத்திருமேனியாகும் என்பது ஐதீகமாக இருக்கிறது. மந்திரங்களின் மூலம் பெறப்படும் சக்தி சிலையின் கண்கள் திறக்கும் போது அருள்வாக வெளிப்படும். இந்த அருள் மீண்டும் தெய்வத்திடமே செல்ல வேண்டும் என்பதற்காக எதிரொளிக்கும் வகையில் கண்ணாடி வைக்கப்பட்டிருப்பதாக சாஸ்திரங்களை கற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Post

"ஐ.டி/கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பு.." ₹.20,000/- சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Mon Jan 22 , 2024
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் காலியாக உள்ள டேட்டா மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அறிவித்துள்ளது . […]

You May Like