fbpx

PM Kissan : அரசு வழங்கும் ரூ.2,000 உதவி தொகை நீங்களும் பெறலாம்…! தேதி அறிவிப்பு… எப்படி பெறுவது…?

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 12வது தவணை எந்த தேதியில் வழங்கப்படும் என்பதை பார்க்கலாம்.

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. அதன் படி, இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் சுமார் 70 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை முதல் தவணை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்திலும் வழங்கப்படும்.. இரண்டு ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். இந்த நிதி உதவி திட்டம் ஒரு விவசாயி, நிதி நெருக்கடியில் இருக்கும் போது, அவர்களின் வரப்பிரதாசமாக அமைந்துள்ளது..

PM Kissan திட்டத்தின் கடன் விவரங்களை எவ்வாறு சரிபார்க்கலாம்..

நீங்கள் PM Kissan திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை https://pmkisan.gov.in/ க்குச் செல்ல வேண்டும்.

வலது பக்கத்தில் உள்ள ‘‘Farmers Corner’ என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து ‘Beneficiary Status’ என்பதை கிளிக் செய்யதால் ஒரு புதிய பக்கம் திறக்கும். புதிய பக்கத்தில், ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகிய ஏதேனும் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் உங்கள் கட்டண நிலையை நீங்களே சரிபார்க்க முடியும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் தகவலை உள்ளிடவும். அதன் பிறகு, ‘Get Data’ என்பதைக் தேர்வு செய்யவும்.

அடுத்ததாக நீங்கள் அனைத்து பரிவர்த்தனை தகவல்களையும் பெறுவீர்கள். அதாவது, உங்கள் கணக்கில் கடைசி தவணை எப்போது வந்தது மற்றும் எந்த வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்ற விவரங்கள் அனைத்தும் காட்டும். 10 மற்றும் 11வது தவணைகள் தொடர்பான தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

அடுத்த ஷாக்... இனி 5 முறைக்கு மேல் ATM-ல் பணம் எடுத்தா கட்டணம் வசூல்...! எவ்வளவு தெரியுமா...?

Thu Aug 18 , 2022
ஏடிஎம்களில் இனி 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் ஏடிஎம்களில் குறைந்த எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகள் உட்பட பயனர் குறிப்பிட்ட வரம்பை மீறிய பிறகு, வங்கிகள் பொருந்தக்கூடிய வரிகளுடன் கூடுதல் கட்டணத்தை விதிக்கின்றன. மேலும், ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளின் […]
’இனி ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்’..!! சுலபமான வழிமுறைகள் இதோ..!!

You May Like