fbpx

அரசு வழங்கும் ரூ.6,000-த்தை நீங்கள் தொடர்ந்து பெற வேண்டுமா…? இதை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்…!

பிரதமர் கிசான் திட்ட விவசாய பயனாளிகள் eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், 12-வது தவணை நிதியை பிரதமர் அக்டோபர் 17 அன்று விடுவித்தார். விவசாய பயனாளி குடும்பங்களுக்கு சுமார் ரூ.16,000 கோடி அளவிலான தொகை அவர்களது வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொகை விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விவசாய பயனாளிகள் 13-வது தவனை பெற eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே விவசாயிகள் விரைவாக eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். eKYC செயல்முறையை மேற்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

eKYC இணைப்பது எப்படி…?

முதலில், விவசாயிகள் PM-Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள ‘e-KYC’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயனாளி விவசாயியின் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும் இடத்தில், பொபைல் எண்ணை உள்ளிட்டவும். அதை உள்ளிட்ட பிறகு ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது, OTP ஐ உள்ளிட வேண்டும். அதன் பின்னர் PM-Kisan e-KYC வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு விடும். பயோமெட்ரிக் முறையில் e-KYC செய்ய ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும்.

Vignesh

Next Post

40 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னையில்!!!எப்போது முதல் தெரியுமா?

Fri Dec 2 , 2022
சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி விரைவில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி எப்போது நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன் படி சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் இந்த கண்காட்சியில் 40 […]

You May Like