fbpx

PM Kissan: ரூ.2,000 நீங்களும் பெற முடியும்…! திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி…?

பிஎம் கிசான் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

பிரதமர் கிசான் யோஜனாவின் 12வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சமிபத்தில் வெளியிட்டார். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலத்தை வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.6,000 தலா ரூ 2,000 வீதம் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.

பிஎம் கிசான் யோஜனா திட்டம் சிறு நில உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. முன்னதாக, இந்தத் திட்டம் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. பின்னர், அனைத்து சிறு நில உரிமையாளர் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. சமீபத்தில் பன்னிரண்டாவது தவணைக்கான தொகை அனைவருக்கும் விடுவிக்கப்பட்டது. 13வது தவணைக்கு நவிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி…?

தகுதியுள்ள விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்ய முதலில் www.pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.பின்னர், ​​முகப்புப் பக்கத்தில், ‘Farmers Corner’ என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

அடுத்து, ‘New Farmers Registration’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்களுக்காக ஒரு பதிவு படிவம் இப்போது திறக்கப்படும். அதில் அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும்.எதிர்கால குறிப்புக்காக நகலை சேமித்து கொள்ளவும்.

Vignesh

Next Post

#Tngovt: விளம்பர பேனர் விலை குறித்து தமிழக அரசு முக்கிய தகவல்...!

Fri Nov 25 , 2022
விளம்பர பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் மட்டுமே செலவு ஆனதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவு செய்வதாக குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதற்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை. மேலும் மாநிலம் […]

You May Like