fbpx

அரசு வழங்கும் ரூ‌.6,000 உதவித்தொகை பெற வேண்டுமா…? இனி ஆதார் எண் கட்டாயம்…! இல்லையென்றால் பெறுவதில் சிக்கல்…!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இதுவரை, 38.24 இலட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மத்திய அரசு 12-வது தவணை தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. பயனாளிகள் அனைவரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் OTP பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

இளைஞர்களே இது தான் சான்ஸ்... தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு...! நாளை இந்த வாய்ப்பை யாரும் தவற விடாதீங்க...!

Thu Aug 11 , 2022
நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது இது குறித்து வேலை வாய்ப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் […]

You May Like