fbpx

பி‌.எம் கிசான்…! விவசாயிகளுக்கு 14 வது தொகை..! e kyc அப்டேட் செய்வது கட்டாயம்…! முழு விவரம்…

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பிரதம மந்திரியின்‌ விவசாய கெளரவ ஊக்கத்தொகை கடந்த 2019-ம்‌ ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில்‌ தவணைக்கு ரூ. 2000/- வீதம்‌ ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000/- விவசாய இடுபொருள்‌ செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

PM KISSAN திட்டத்தில்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ 24000 பயனாளிகள்‌ தற்போதுபயன்பெற்று வருகின்றனர்‌. இத்திட்டத்தில்‌ பயனாளிகள்‌ தொடர்ந்து பயனடைய ekyc, நில ஆவணங்கள்‌ பதிவேற்றம்‌ மற்றும்‌ வங்கிக்கணக்குடன்‌ ஆதார்‌ எண்‌ இணைத்தல்‌ போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும்‌. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ 4762 பயனாளிகள்‌ ekyc முடிக்காமலும்‌ 395 பயணாளிகள்‌ வங்கிக்‌ கணக்குடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்காமலும்‌ உள்ளனர்‌.

இந்நிலையில்‌ தற்போது இந்திய தபால்‌ வங்கி ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ்‌ கணக்கு தொடங்க முன்‌ வந்துள்ளது. மேலும்‌ PM KISSAN ekyc தபால்‌ நிலையத்தை அணுகி முடிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. மேலும்‌ PM KISSAN திட்டத்தில்‌ பயன்பெறும்‌ மேற்கூறிய பணிகளை முடிக்காத பயனாளிகள்‌ அனைவரும்‌ நில ஆவணங்களை தங்கள்‌ பகுதி வட்டார உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ளலாம்.

மேலும் ekyc பணியை தானாகவே PM KISSAN வலைதளத்தில்‌ அல்லது பொதுசேவை மையங்களில்‌ அல்லது தபால்‌ நிலையத்தை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்‌ அலுவலகத்தை தொடர்பு கொண்டும்‌, வங்கிக்‌ கணக்குடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்க சம்மந்தப்பட்ட வங்கி கிளையை அணுகுமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. மேற்கூறிய பணிகள்‌ அனைத்தையும்‌ முடித்தால்‌ மட்டுமே PM KISSAN 14 வது தவணை மற்றும்‌ அதனைத்‌ தொடர்ந்து உதவித்தொகை பெற இயலும்‌.

Vignesh

Next Post

திரிபுராவில் சோகம்...! தேர் தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழப்பு மற்றும் 15 பேர் படுகாயம்....! முதல்வர் இரங்கல்...

Thu Jun 29 , 2023
திரிபுரா மாநிலம் உனகோடி மாவட்டத்தில் உயர் அழுத்த மின் கம்பியில் தேர் தீப்பிடித்ததில் 6 பேர் இறந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். ஜகந்நாதரின் ‘உல்டா ரத யாத்திரை’ திருவிழாவின் போது குமார்காட் பகுதியில் மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திருவிழாவின் போது, உடன்பிறந்த தெய்வங்கள் — பகவான் பாலபத்ரா, தேவி சுபதாரா மற்றும் பகவான் ஜெகநாதர் — ரத யாத்திரைக்குப் பிறகு […]

You May Like