fbpx

PM Kissan: விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்…! மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!

வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து பயனாளிகளும் விவசாய கடன் அட்டை (Kisan Credit Card) பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பாரத பிரதமரின் Ghar Ghar KCC Abhiyan – திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் 31.12.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு நடத்தப்படவுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கடன் சங்க அலுவலர்கள் மூலம் மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் விவசாய கடன் அட்டையினை கொண்டு ரூ. 1,60,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மட்டும்) வரை வட்டியில்லா கடன் பெறலாம். இக்கடன் தொகை பெறுவதற்கு எந்தவித அடமானமும் (Collaterals Security) வைக்க தேவையில்லை.

இதுநாள் வரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் மற்றும் பிரதம மந்திரி தங்களது நில உடமை ஆவணங்கள் (சிட்டா, அடங்கல்), வங்கி கணக்கு புத்தக நகல் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விவசாய கடன் அட்டையினை (Kisan Credit Card) பெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இனி ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம்…! மத்திய அரசு அதிரடி..!

Tue Oct 3 , 2023
கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு இ-சிகரெட் தடை சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை ஏற்றுமதி, இறக்குமதி உற்பத்தி செய்தல், விளம்பரம் மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தனிநபர் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் பலர் ஆன்லைன் மூலம் இ-சிகரெட்டை பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இ-சிகரெட் தடை சட்டத்தில் அபராதம் சிறைத்தண்டனை போன்ற கடுமையான விதிமுறைகள் இருந்தும், இது மக்களிடம் […]

You May Like