fbpx

PM Modi | மேடையில் பிரதமருடன் கைகோர்க்க போகும் 2 முக்கிய புள்ளிகள்..!! அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்..!!

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையால் இன்று சென்னையில் முக்கியமான சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனத்தில் நடைபெறும் “தாமரை மாநாடு” பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வரவுள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக தேர்தல் காலங்களில் இப்படி பல்வேறு பொதுத்திட்டங்களை தொடங்கி வைக்க மோடி பயணம் மேற்கொள்வது அவசியம். அதேபோல் இந்த முறையும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வருகிறார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை முறையாக இங்கே மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூட்டணி தலைவர்களை பாஜக மேடையில் ஏற்றும் வாய்ப்புகள் உள்ளன. டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உட்பட சிலர் மேடைக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளன. இது போக ஜிகே வாசன், ஐஜேகே பாரிவேந்தர் ஆகியோரும் இந்த நிகழ்வில் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் கூட்டணி தொடர்பான முக்கியமான விஷயங்களை நிகழ்ச்சி முடிந்த பின் மோடி அண்ணாமலையிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு :

* திமுக அட்டாக்தான் இன்று மோடியின் பேச்சில் பிரதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

* கூட்டணி தலைவர்களை மேடை ஏற்றுவது பிரதானமாக இருக்கும்

* முக்கியமாக டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை மேடைக்கு கொண்டு வர திட்டம் இருக்கலாம்.

* அதிமுகவின் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி மோடி மீண்டும் உருக்கமாக பேச வாய்ப்பு உள்ளது.

* தமிழ்நாட்டின் போதை பொருள் விவகாரம் தொடர்பாக மோடி ஸ்டேட்மென்ட் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.

Read More : Rich People | கோடிகளில் குவியும் சொத்து..!! இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை..!!

Chella

Next Post

Darling | ’பெண்களின் சம்மதம் இன்றி ”டார்லிங்” என அழைத்தால் அது குற்றம்தான்’..!! நீதிமன்றம் அதிரடி..!!

Mon Mar 4 , 2024
பெண்களின் சம்மதம் இன்றி டார்லிங் என அழைப்பது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு அந்தமானில் உள்ள வெபி கிராமத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலரை ஜனக் ராம் என்ற நபர் “டார்லிங் அபராதம் விதிக்க வந்தாயா?” என கேட்டுள்ளார். இதையடுத்து மாயபந்தர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு விசாரணைக்கு வந்த நிலையில், ஜனக் […]

You May Like