fbpx

அண்ணாமலையின் யாத்திரையில் பங்கேற்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..? சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!!

டிசம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமேஸ்வரம் பாம்பன் பால பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்கு வர உள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

அந்த பாதயாத்திரையின் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

மாதத்தின் முதல் நாள்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Wed Nov 1 , 2023
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.5,686-க்கும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45,488-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை […]

You May Like