fbpx

PM Modi | தமிழ்நாட்டில் மீண்டும் புயலை கிளப்ப வரும் பிரதமர் மோடி..!! இந்த டைம் பிளானே வேற..!!

மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மீண்டும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், கட்சி சார்ந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி வருகை தந்தார்.

கடந்த மார்ச் 4ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே அவர் உரையாற்றினார். இந்நிலையில், பிரதமர் மோடி தென்னிந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மார்ச் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக தெரிகிறது.

மார்ச் 15ஆம் தேதி சேலத்திற்கும், மார்ச் 16ஆம் தேதி கன்னியாகுமரிக்கும், மார்ச் 18ஆம் தேதி கோவைக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இம்முறை பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, பிரதமர் மோடி அறிமுகப்படுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Suicide Attempt | புதுச்சேரி சிறுமி வழக்கில் முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி..!! பெரும் பரபரப்பு..!!

Chella

Next Post

Ramadan Fasting | தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா ரமலான் நோன்பு..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Mon Mar 11 , 2024
சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்ட நிலையில், இன்று (மார்ச் 11) முதல் அங்கு ரமலான் நோன்பு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9-வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிட்ட பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு கடைபிடிப்பார்கள். பிறை கணக்குபடி […]

You May Like