உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்ற இடத்தை பிரதமர் மோடி பிடித்துள்ளார்.
இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்த G20 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீத அங்கீகாரத்துடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்ற இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின்படி, பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு குறித்து எழுதிய கேள்விக்கு பதிலளித்தவர்களில் 76 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்., 18 சதவீதம் பேர் ஏற்கவில்லை என்றும், ஆறு சதவீதம் பேர் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் ‘குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங் டிராக்கரின்’ படி, பிரதமர் மோடி இரண்டாவது பிரபலமான தலைவரான சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டை விட 64 சதவீத மதிப்பீட்டைக் கொண்டுள்ளார், மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மூன்றாவது சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். அவரது ஆட்சிக்கு 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.