fbpx

‘ராம் ஆயேங்கே ..’ கண்களில் கண்ணீர்.. மனமெங்கும் உணர்வுகள்.! திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி பகிர்ந்த ஸ்ரீராமரின் பஜனை.!

ராம் மந்திர திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரம் கோலாகலமாக தயாராகி வருகிறது. உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ஆம் தேதி பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் 10,000 முதல் 15,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்காக ராமர் வருகிறார் என்ற பாடலை வளர்ந்து வரும் பாடகரான ஸ்வேதா மெகுல் வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்தப் பாடலை ஸ்ரீராமருக்கு அர்ப்பணிப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் மூன்று லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்தப் பாடல் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் பாடலால் மிகவும் ஈர்க்கப்பட்ட பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்தப் பாடல் குறித்து வெகுவாக பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர் கேட்போரின் மனதை உருக்கி கண்களில் கண்ணீர் வர வைக்கும் இந்தப் பாடல் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவு செய்திருக்கும் பிரதமர் ” ஸ்ரீராமரின் இந்த பஜனை கேட்கும்போது நம் காதுகள் வழியாக மனதிற்குள் புகுந்து உணர்வுகளை தட்டி எழுப்பி கண்களில் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு மனதை வருடுவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது . ஸ்ரீராமரின் கோவில் திறக்கப்பட இருக்கும் இந்த நேரத்தில் மக்களின் உத்வேகத்தையும் பக்தியையும் தூண்டும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கிறது” என பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

Next Post

ஒரு கிராம் தங்கம் ரூ.7,000ஐ தாண்டும்..!! இப்போவே வாங்கிருங்க... பின்னாளில் கஷ்டம்தான்..!! எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்..!!

Sat Jan 6 , 2024
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே பெரியளவில் ஏற்றம், இறக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ”தங்கம் குறித்து முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது. இப்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,900 என்ற ரேஞ்சில் இருக்கிறது. பிரபல ஆங்கில செய்தித்தாளில் தங்கம் விலையை […]

You May Like