குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற திட்டத்தை துவங்கி வைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அந்த திட்டத்தை துவங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “குஜராத் மாநிலத்தின் கல்வி திட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள், ஸ்மார்ட் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதற்கெல்லாம் மீறி 5ஜி தொழில்நுட்பம் கல்வி முறைக்கு முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். ஆங்கிலம் தான் அடிப்படை மொழி என்பதை புதிய கல்விக் கொள்கை மாற்றம் ஆங்கிலம் என்பது அறிவு சார்ந்தது அல்ல. அது வெறும் தகவல் தொடர்பு மொழி தான்.
ஆங்கில மொழி தெரியாத மாணவர்கள் கல்வி அறிவில் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் பிராந்திய மொழியில் அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது. ஏழை மக்களின் கல்வி,அறிவு ஆங்கிலம் தெரியவில்லை என்று மழுங்க கூடாது.
அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் பொறியியல் மற்றும் மருத்துவம் சேரும் நிலை இருப்பதை உறுதி செய்வது தான் மத்திய அரசின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.