fbpx

பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி..!! அப்பல்லோவில் தீவிர சிகிச்சை..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி. இவர் இந்தியா முழுக்க ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களும் குடும்பத்துடன் சென்று வந்துள்ளார். தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த பிரதமர் மோடி, சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Chella

Next Post

பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கு நடைபெறும்...! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.‌.!

Tue Feb 28 , 2023
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது. பட்ஜெட் அறிவிப்புகள், அதை முன்னெடுத்து செல்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைய வழிக் கருத்தரங்கை நடத்த உள்ளது. இந்த இணைய வழிக் கருத்தரங்கம் ‘அளவில்லா திறன்: தொழில்நுட்ப பயன்பாடு […]
ஜிஎஸ்டி கவுன்சில் மீது பழி சுமத்திவிட்டு நீங்கள்தான் அதிக விலைக்கு விற்கிறீர்கள்..! - நிர்மலா சீதாராமன் காட்டம்

You May Like