fbpx

பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை தேறி வருகிறது…மருத்துவமனை அறிக்கை

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்  மோடியின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவரது உடல்நிலைசீராக இருப்பதாக மருத்துவமனைதரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேத்தா மருத்துவமனைக்கு நேற்று மாலை சென்ற பிரதமர் மோடி, தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்த மருத்துவர்களிடம் தாயாரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் மருத்துவமனையில் இருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனை சார்பில் இன்று மீண்டும் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்  மோடியின் உடல்நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

Thu Dec 29 , 2022
மிளகாய் பொடி தூவி இளைஞர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், கண்களில் மிளகாய் பொடி தூவி, அந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரம் தீராததால் அந்த மர்ம கும்பல் இளைஞரின் தலையை துண்டித்து […]

You May Like