fbpx

மக்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்க…! பாலஸ்தீன அதிபருடன் தொலைபேசியில் உரையாடி பிரதமர் மோடி…!

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு போரை தொடங்கி உள்ளது. இந்த இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸுக்கு ஆதரவாக முழு வீச்சில் ஈரான் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி; காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் மற்றும் அதில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கிடையிலான உரையாடலில், பாலஸ்தீனத்தில் நிலவும் தாக்குதல் குறித்து கலந்துரையாடினர். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் தீவிரவாதம், வன்முறை மற்றும் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த கவலைமயை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவித்தார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் அசைக்க முடியாத கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Vignesh

Next Post

திடீர் முடிவு...! திருப்பூரில் "என் மண் என் மக்கள்" பாத யாத்திரை ரத்து...! மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...!

Fri Oct 20 , 2023
பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, தமிழக பாஜகவின் நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர். இந்த நிலையில் இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை […]

You May Like