fbpx

கனடாவின் பிரதமர் ட்ரூடோ பாடல் வைரல் …. ராணியாருக்கு இரங்கல் தெரிவித்து பாடல்…

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறைந்த மகாராணிக்கு இரங்கல் தெரிவித்து பாடிய பாடல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது..

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ட்ருடோ லண்டனில் உள்ள கோரிந்தியா ஹோட்டலில் தங்கினார். அப்போது எலிசபெத் மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் “Bohemian Rhapsody” என தொடங்கும் பாடலைப் பாடினார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தங்கள் போனில் அதை பதிவு செய்துள்ளனர். தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

மெரூன் நிறத்தில் அடர்ந்த நிற ஜீன்ஸ் உடை அணிந்து பியானோவுக்கு அருகில் ஓட்டலின் லாபியில் பாடல் பாடிக் கொண்டிருக்கின்றார். இந்த வீடியோவை வெளியிட்டு … மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரு சிலர் அவரது செயல்கள் அதாவது கைகள் அசைவு , முக பாவனை சரியில்லை என கூறி வருகின்றனர். இதை பிரிட்டானிய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என தெரியவில்லை. ஏனென்றால் இது ராணியின் இறுதி நிகழ்வு. இவரது முகபாவனைகள் , இவையெல்லாம் அந்த இடத்திற்கு பொருந்தவில்லை. என கூறினர்.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அலுவலகத்தில் இருந்தும் அறிக்கைகள் வந்தன. சனிக்கிழமை அன்று இரவு உணவு நேரத்திற்கு பின்னர் கனடா நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஒரு சிறிய ஒன்றிணைவுக் கூட்டத்தின்போது அஞ்சலி செலுத்தியது. எந்த முன்னேற்பாட்டுடன் இதை செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

டுவிட்டரில் பள்ளி மாணவிகளின் போர்ன் , ரேப் அதிர்ச்சி வீடியோக்கள் …. டெல்லி மகளிர் ஆணையம் அதிரடி ….

Tue Sep 20 , 2022
டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பள்ளி மாணவிகளின் போர்ன் மற்றும் பாலியல் பலாத்கார வீடியோக்கள் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைப்பது பற்றி டெல்லி மகளிர் ஆணையம் டுவிட்டருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மல்லிவால் ’’டுவிட்டர் ’’ தலைமையகத்திற்கும் டெல்லி காவல் நிலையத்திற்கும் சம்மன அனுப்பியுள்ளார். அதில் , டுவிட்டர் மற்றும் இணையதளங்களில் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் பள்ளி மாணவிகளின் பலாத்கார வீடியோக்கள் , பள்ளி […]
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்..!! லிஸ்டில் இடம்பிடித்த தமிழ்நாடு..!! மத்திய அரசின் அறிக்கையால் அதிர்ச்சி..!!

You May Like