தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்ற 53 வயது நபர் பாமக முன்னாள் பேரூர் தலைவராக பதவி வகித்து வருகின்றார். இவருக்கு 42 வயதில் வனிதா என்ற மனைவியும், ஸ்ரீமதி, ஸ்ரீ ராம் என்ற பிள்ளைகளும் இருக்கின்றனர்.
திருசம்பந்தத்திற்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் பல ஆண்டுகளாக நில தகராறு ஏற்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் குடும்பத்துடன் சேர்ந்து தாக்கி இருக்கிறார். இது குறித்து போலீசில் திருஞான சம்பந்தம் புகார் கொடுத்ததன் பேரில் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகன் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஜாமினில் தற்போது வெளியில் வந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருஞான சம்பந்தத்தை வழிமறித்து சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடு உள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் திருஞான சம்பந்தத்தை விட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.