fbpx

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாசிட்டிவ்… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்..

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது..

கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது..

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.. சராசரியாக ஒரு நாளைக்கு 15,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.. மேலும் தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து.. தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது..

மேலும் பொதுமக்கள் அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், அதிகாரிகள் என பல தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.. அந்த வகையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. நேற்று முன் தினம் அவருக்கு தொண்டை வலி ஏற்பட்ட நிலையில், அவர் சோர்வுடன் இருந்துள்ளார்.. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.. மேலும் தைலாபுரம் வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. ராமதாஸ் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

வரும் 17-ம் தேதி வரை பலத்தகாற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..

Thu Jul 14 , 2022
வரும் 17-ம் தேதி வரை பலத்தக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்றூ வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. […]

You May Like