fbpx

உயிரிழப்புகளில் பாகுபாடு… தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு…!

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில நாட்களில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தியிருந்தேன். எனினும், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது. இந்தத் தவறுக்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணமா அல்லது வேறு காரணமா…? என்பது தெரியவில்லை. நடந்த தவறை சரி செய்யும் வகையில் ஜூலை மாதம் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

திருமணம் முடிந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது...! உச்ச நீதிமன்றம் அதிரடி...! தீர்ப்பின் முழு விவரம் உள்ளே...

Thu Oct 6 , 2022
திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் அரசு ஊழியர் இறந்து பல ஆண்டுகள் ஆனதால், கருணை […]

You May Like