fbpx

2024 தேர்தலில் பாமக கண்டிப்பாக கூட்டணி அமைக்கும்..! திமுக, அதிமுகவுடன் இல்லை? அன்புமணி ராமதாஸ்…

பாமகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பொதுவாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

மதுரை, தூத்துக்குடி தொகுதிகள் வளர்ச்சி பெற்றால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் இதை மத்திய மாநில அரசுகள் இணைந்து தென் தமிழகத்தை வளர்ச்சி பெற ஏதுவாக தமிழ்நாடு தென் மண்டல தொழில் ஆணையத்தை தொடங்க வேண்டும். அதில் ஆணையராக ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவரை முதன்மைச் செயலாளராக நியமித்தால் இப்பகுதியில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

பாஜக ஆளுகிற மாநிலத்திற்கு மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் மதுரை எய்ம்ஸ்க்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2008 – 2009 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் அறிவிக்கப்ட்டுள்ளது. எனவே., பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு “2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் நோக்கம். திமுக., அதிமுக இரண்டு ஆட்சி காலத்திலுமே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற எண்ணத்தில் மக்கள் வந்து விட்டார்கள். அதிமுக திமுகவை தவிர்த்து மாற்றுக் கட்சியை மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் எண்ணத்தை பாமக நிறைவேற்றும்.

மேலும் இப்போது தேர்தல் கூட்டணி என்பது அவசியம் இல்லை., தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும், நீர் மேலாண்மையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய நோக்கம். திமுக வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றார்கள்., திமுக அரசு செய்ததா..? பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை.? இவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குள் ஆட்சியே முடிந்துவிடும்” அன்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Kathir

Next Post

கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்த விலைவாசி - தனியார் நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல்...!

Wed Jan 4 , 2023
நம் நாட்டில் மாத சம்பளம் வாங்கி அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை தான் அதிகம். இந்த நிலையில் நம் வீட்டுக்கு மாதம் மாதம் தேவையான அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட 5 வகையான செலவினங்கள் கடந்த ஆண்டு எவ்வாறு இருந்தன என்பது குறித்து மும்பையை சேர்ந்த Axis my india எனும் அமைப்பு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. எதற்காக […]

You May Like