fbpx

மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்..! மச்சினிச்சியை கடத்திச் சென்றதால் பரபரப்பு..!

மனைவியின் தங்கையை கடத்திய விவகாரத்தில் கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் (42) என்பவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், வெங்கடாசலம் கடந்த 2018இல் கோபி மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தபோது, மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் பல்வேறு திட்டம் தீட்டியுள்ளார். இதனால், 2018 ஆம் ஆண்டு பி.எட் படித்து வந்த மனைவியின் தங்கையிடம் மதுரையில் உள்ள கோவிலுக்குச் செல்லலாம் என்று கூறிய வெங்கடாசலம் தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையுடன் ஈரோட்டில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது மதுரை அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் தனது மனைவியை இறக்கி விட்டு விட்டு மனைவியின் தங்கையை மட்டும் கடத்திக் சென்றுள்ளார்.

மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்..! மச்சினிச்சியை கடத்திச் சென்றதால் பரபரப்பு..!

இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடாசலத்தின் மனைவி இதுகுறித்து சோதனைச் சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை போலீசாரின் உதவியுடன் வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியில் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், வெங்கடாசலம் மனைவியின் தங்கையை கடத்திச் சென்றது உறுதியானது. இதைத்தொடர்ந்து கடத்தல் வழக்குப் பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த வெங்கடாசலம் மீண்டும் பணியில் சேர்ந்தார். பின்னர் கொரோனா காலகட்டத்தில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், மனைவியின் தங்கை கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாசலத்தை பணிநீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கொங்கு மண்டல போலீசார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

சூர்யா-ஷங்கர் கூட்டணியில் உருவாகிறது ’வேள்பாரி’ நாவல்..? வெளியான சுவாரஸ்ய தகவல்..!

Sun Sep 11 , 2022
வீரயுக நாயகன் வேள்பாரி என்ற வரலாற்று புனைவு நாவலை இயக்குநர் ஷங்கர் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கதாநாயகனாக சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்து ரசிகர்களிடையே பேராதரவு பெற்ற நாவல் வேள்பாரி. இதனை, மதுரை எம்பியும், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எழுதியிருந்தார். பறம்பு மலையை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் வேள்பாரி, கடையேழு வள்ளல்களில் ஒருவராக […]
சூர்யா-ஷங்கர் கூட்டணியில் உருவாகிறது ’வேள்பாரி’ நாவல்..? வெளியான சுவாரஸ்ய தகவல்..!

You May Like