fbpx

பாதுகாப்பு அச்சுறுத்தல் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு…..! சென்னை பெருநகர காவல் துறையினர் நடவடிக்கை….!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வருகின்ற காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.

நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நேற்று உத்தரவு பிறப்பித்தார் இந்த உத்தரவின் அடிப்படையில், மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிறைத்துறை கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கிறார்.

அதோடு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கு நடுவே செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் இருக்கின்ற சாஸ்திரி பவனில் செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்னை பெருநகர காவல் துறையினர் சார்பாக காவல் துறை பாதுகாப்பு இன்று வழங்கப்பட்டிருக்கிறது.

அங்கே சந்தேகத்திற்குரிய வகையில், சுற்றி திரிந்த நபர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலைமை சீராகும் வரையில் இந்த பாதுகாப்பு தொடரும் என்று காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Next Post

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது..? இதற்கு மனைவி தான் காரணம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!!

Fri Jun 16 , 2023
ஓமந்தூரார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என செந்தில் பாலாஜி விருப்பம் தெரிவித்தார் என்றும் ஆனால், அவரது மனைவி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்பியதால் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செந்தில் பாலாஜி ஓமந்தூராரில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு விரைவாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவும், இஎஸ்ஐ மருத்துவர்கள் குழுவும் பரிந்துரைத்திருந்தது. […]

You May Like