சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வைரலானால் அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு தற்போது சோசியல் மீடியா தீயாக இருக்கிறது.
இந்த சூழலில், ஒரு பெண் காவல் ஆய்வாளர் காவிச் சீருடையில் தனது மகளுடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு இருப்பது வெறும் சர்ச்சையாகி இருக்கிறது. சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக விஜயலட்சுமி பணியாற்றி வருகின்றார்.
இவருக்கு சாரா என்ற மகள் இருக்கின்றார். மகள் சாரா இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமானவர். அதிகப்படியாக வீடியோ வெளியிட்டு வருவது அவரது வழக்கம். சமீபத்தில், இவர் தனது தாய் விஜயலட்சுமியுடன் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில், “மம்மி இங்க கொஞ்சம் வாங்க நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன்.” என்று கூற அதற்கு விஜயலட்சுமி கிண்டலாக பதில் கூறுகிறார். விஜயலட்சுமி சீருடையில் இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமிக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.