இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. திமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கூட்டணியை தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா? என அரசியல் பார்வையாளர்கள் இடையே விவாதங்கள் ஒருபுறம் அரங்கேறி வருகின்றன.
இந்த பரபரப்பான சூழலில் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது, இன்னும் ஒரு மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று நிர்வாகிகளிடம் விஜய் உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் குறித்து பிறகு ஆலோசித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.