fbpx

‘விஜயகாந்தை காவு வாங்கிய அரசியல்’..!! ’ஆரோக்கியத்துல தோத்துட்டாரு’..!! நினைவேந்தல் நிகழ்ச்சியில் வேதனை..!!

விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால், நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராஜ்கிரண், ”என் தம்பி விஜயகாந்த் ஒரு வெள்ளந்தியான மனிதர். அவருக்கு சூழ்ச்சிகள் தெரியாது. அவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருப்பார். அரசியல் தான் அவரை காவு வாங்கி விட்டது. விஜயகாந்த் நோய்வாய்ப்பட்ட காலம் முதல் இறக்கும் வரை எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருப்பார். அதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. அந்த நல்ல மனம் இறைவன் நிழலில் சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகை ரேகா பேசுகையில், ”எப்படி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இருக்கும்போது நடிச்சிருக்கோம் என்பதைப் போல விஜயகாந்த் இருக்கும் போது நடிச்சிருக்கேன் என நினைக்கையில் பெருமையா இருக்கு. அவருடன் நான் 5, 6 படங்களில் நடித்துள்ளேன். வெள்ளை ஆடை அணிந்து வந்தால் அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும். ஒரு காந்த பார்வை விஜயகாந்திடம் இருக்கும்.

எனது தந்தை, எம்ஜிஆர் இறப்புக்கு பின்னால் நான் அழுதது விஜயகாந்த் இறப்புக்கு தான் அழுதேன். விஜயகாந்த் நடிகனாக, அரசியல்வாதியா ஜெயிச்சிட்டாரு. ஆனால் உடல் ஆரோக்கியத்துல தோத்துட்டாரு. அதனால் எல்லாரும் ஆரோக்கியத்தை பார்த்துக்கோங்க” என கூறினார்.

Chella

Next Post

பக்கா ஸ்கெட்ச்..!! பாமக, விசிகவை விமர்சிக்காதீங்க..!! திமுக, பாஜகவை போட்டுத் தாக்குங்க..!! எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!!

Sat Jan 20 , 2024
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு அமைத்த கூட்டணியை வைத்தே நாடாளுமன்ற தேர்தலையும் திமுக எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அதிமுக, இனி எந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. இந்நிலையில், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். […]

You May Like