fbpx

பொங்கல் பண்டிகை..! வேட்டி, சேலைகள் திட்டத்திற்கு தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை..! வேட்டி, சேலைகள் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு..!

1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு செப்டம்பர் 9ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் அறிவிப்பால் தைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சட்டென்று குறைந்த கச்சா எண்ணெய் விலை..! ஆனால், பெட்ரோல்-டீசல் மட்டும் ஏன்..?

Wed Aug 24 , 2022
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், பெட்ரோல்-டீசல் விலை மட்டும் குறையாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 90.23 அமெரிக்க டாலராக இருந்தது. லண்டனில் வர்த்தகம் செய்யப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.3 […]

You May Like