fbpx

பொங்கல் பரிசுத் தொகுப்பு..!! நாளை முதல் வீடு தேடி வருகிறது டோக்கன்..!! என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. மேலும், இலவச வேட்டி சேலைகளும் தயாராக உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3) முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தொகுப்பு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டோக்கனில் உள்ள நாளில் சென்று பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளை முதல் வீடு வீடாகச் சென்று வழங்கவுள்ளனர். நியாயவிலைக் கடையில் காலை 100 பேர், மாலையில் 100 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் வகையில் டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய விவரங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் விநியோகம் நாளை தொடங்க உள்ள நிலையில், ரேஷன் பணியாளர்கள், நாளை முதல் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்க உள்ளனர்.

Read More : தவெக-வின் 2-வது மாநாட்டில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய்..? என்ன செய்யப்போகிறார் தெரியுமா..?

English Summary

This year, all ration rice card holders will be given one kilogram of brown rice, one kilogram of sugar and whole sugarcane as a Pongal gift package.

Chella

Next Post

பச்சை நிறத்தில் ரூ.5000 நோட்டுகள்.. சமுக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா? - RBI விளக்கம்

Thu Jan 2 , 2025
Will there be a Rs. 5000 note? Do you know what the RBI said?

You May Like