fbpx

பொங்கல் பரிசு ரூ.1000… முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. இதை வழங்குவதற்கான நடைமுறை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நாளை தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த கூட்டத்தொடரை சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கவர்னர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கும். தமிழக சட்டசபை கூட இருக்கும் தேதி, கவா்னர் உரையில் இடம் பெறும் கருத்துகள் ஆகியவை பற்றியும் நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Kathir

Next Post

வெளிநாட்டில் இருப்பவர் எப்படி மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது? மின்வாரியம் புதிய அப்டேட்...

Sun Dec 18 , 2022
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம், மற்றும் சிறப்பு இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் வசிப்பவர்களின், தமிழகத்தில் உள்ள அவர்களுது வீட்டின் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் 4வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ. […]
மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும்..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

You May Like