சீரியல் நடிகர் ஸ்ரீதரன், மாரடைப்பால் சென்னை தி.நகரில் காலமானார். அவருக்கு வயது 62. ஸ்ரீதரன் குடும்பத்திற்கு சக நடிகர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் ஸ்ரீதர். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் வில்லன், அப்பா போன்ற பல வேடங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், நேற்று மாலை நடிகர் ஸ்ரீதர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அடுத்தடுத்து பிரபலங்களின் மரணத்தால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளியன் வேலன் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். சென்னை தி நகர் இல்லத்தில் இருந்த போது நேற்று மாலை 5 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்திருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நடிகரின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.