fbpx

அலுவலகத்தில் ஆபாசப் படம்..!! 4 நாட்கள் இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்ட ஊழியர்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

அலுவலகத்தில் ஆபாசப் படம் பார்த்த தனியார் நிறுவன ஊழியரை 4 நாட்களுக்கு இருட்டறையில் பூட்டி வைத்து தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தின் வேலையை சரியாக செய்யாத போது அல்லது, அலுவலக நேரத்தில் வேறு வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நிறுவனம் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்வது வழக்கம். சீனாவில் உள்ள Guangzhou Duoyi Network Co Ltd என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் அலுவலக நேரத்தில் வேலை செய்யாமல், தனது சொந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், அந்த ஊழியர் அலுவலகத்தில் ஆபாச படங்களை பார்ப்பது தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இது நிறுவனத்தின் முதலாளிக்கு தெரியவந்ததை அடுத்து, அவரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அந்த நபர் 2022ஆம் ஆண்டில் இருந்து சரியாக வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாள்தோறும் அலுவலகத்திற்கு வரும் அந்த ஊழியரை தனி இருட்டு அறையில் அடைத்து வைத்து, அலுவலக நேரம் முடிந்த பின்னர் திறந்துவிட்டுள்ளனர்.

இது போல தொடர்ந்து 4 நாட்களுக்கு செய்துள்ளனர். பின்னர், அந்த ஊழியரின் மனைவி இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரிடமும் கருத்துகளை கேட்டு நீதிபதி, அந்த நிறுவனத்தின் ஊழியர் மீது தவறு இருப்பதாக கூறி அவருக்கு ரூ. 43 லட்சம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார். மேலும், அந்த ஊழியரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

Read More : ’இனி வரும் காலங்களில் நிலத்தடி நீரை குடிக்கவே முடியாது’..!! ’அப்படினா விவசாயம்’..? வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!!

English Summary

An employee of a private company was punished by being locked in a dark room for 4 days after watching a pornographic film in the office.

Chella

Next Post

இந்த மெசேஜ் வந்தால் உஷார்..!! தெரியாமல் கூட இந்த தவறை பண்ணிடாதீங்க..!!

Fri Jul 12 , 2024
Cybercrime police have advised people to be cautious about the 'SBI Reward Point Scam'.

You May Like