fbpx

விமானத்தில் உள்ள திரையில் ஆபாச படம்.. சங்கடத்தில் நெளிந்த பயணிகள்..!! என்ன ஆச்சு?

மக்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல விமானங்களைப் பயன்படுத்துகிறார்கள். விமானம் மூலம் நாம் 24 மணிநேர தூரத்தை ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் பயணிக்க முடியும். ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் செல்லும் விமானத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. விமான பயணத்தின் போது சீட்கள் முன்பு இருக்கும் ஸ்கீரின்களில் ஆபாச படம் ஒடியுள்ளது. இதனால் குடும்பத்துடன் பயணம் செய்த மக்கள் சங்கடத்தில் நெழிந்தனர்.

இந்த சம்பவம் சிட்னியில் இருந்து ஹனேடா (ஜப்பான்) செல்லும் விமானத்தில் நிகழ்ந்துள்ளது. ஏன் இப்படி நடக்கிறது என்று விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி சில பயணிகள் உடனடியாக பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் முதல் சில நிமிடங்களில் யாரும் அதை கவனிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, சிலர் குரல் எழுப்பத் தொடங்கியதும், ஊழியர்கள் அதனை சரி செய்ய முயன்றனர். இருப்பினு சில மணி நேரம் கழித்தே அதனை சரி செய்ய முடிந்தது. இதனால், பயணிகள் அசௌகரியம் அடைந்தனர். 

இதைத் தொடர்ந்து, விமான நிறுவனம் நிலைமையை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. இது தொழில்நுட்பக் கோளாறு என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டதுடன், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று பயணிகளிடம் உறுதியளித்துள்ளது. முன்னதாக பாட்னா ரயில் நிலையத்தில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Read more ; சற்றுமுன்…! வடகிழக்கு பருவ மழை தொடர்பான புகார்களுக்கு 1914 என்ற எண் அறிமுகம்…!

English Summary

Pornography on the screen in the plane..

Next Post

பணத்தை பூஜை அறையில் வைக்கலாமா..? மணி பர்ஸில் இதை வைக்க மறந்துறாதீங்க..!!

Tue Oct 8 , 2024
In this post we will see which direction is right to put money

You May Like