fbpx

மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் கல்வி உதவித்தொகை…! புதிய இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ (10ம்‌ வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்‌) கல்வி உதவித்தொகை திட்டம்‌ மற்றும்‌ பிரிமெட்ரிக்‌ (9 மற்றும்‌ 10ம்‌ வகுப்புகள்‌) ஆகிய திட்டங்களுக்குரிய escholarship.tn.gov.in என்ற இணையதளம்‌ திறக்கப்பட்டது.

மேற்கண்ட திட்டங்களின்‌ கீழ்‌ பயன்பெற தகுதி வாய்ந்த பழங்குடியினர்‌ நல மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும்‌ புதுப்பித்தல்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சாதிச்சான்று, வருமான சான்று, மதிப்பெண்‌ சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல்‌, ஆதார்‌ எண்‌, வருகை சான்று, தேர்ச்சி பெற்ற நகல்‌ உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன்‌ escholarship.tn.gov.in கல்வி இணையதள வழியாக பள்ளிகள்‌/கல்லூரிகள்‌ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை சம்மந்தப்பட்ட கல்லூரிகள்‌ மூலமாகவும்‌, பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட கல்வி அலுவலர்கள்‌ மூலமாகவும்‌ விண்ணப்பித்து மாணவ/மாணவியர்கள்‌ பயன்பெறலாம்‌.

English Summary

Post Matric all courses above 10th standard Scholarship

Vignesh

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறு..!! குழந்தைகளை அடித்து காயத்திற்கு மிளகாய் பொடி போட்ட காதலன்..!! வேடிக்கை பார்த்த தாய்..!!

Wed Feb 5 , 2025
Pawan thought that Sasi's children were an obstacle to his happy life.

You May Like