fbpx

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…! உடனே அப்ளை பண்ணுங்க….!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

விண்ணப்பதாரர் Motor Mechanism தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு 7th CPC என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_10072022_MMS_Eng.pdf

Vignesh

Next Post

கடல்போல் அலங்கரிக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம்..! பேரணியாக சென்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் மரியாதை..!

Sun Aug 7 , 2022
கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் முக.ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்த இடத்தில் 2.21 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம் அமைக்கும் பணி தொடர்ந்து […]
கடல்போல் அலங்கரிக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம்..! பேரணியாக சென்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் மரியாதை..!

You May Like