மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் 2023 என்ற பெயரில் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி இந்திய அஞ்சல் துறை சார்பாக மக்களுக்கு பல சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. அதில் பெண்களுக்காக மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் 2023 என பெயரிடப்பட்ட சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் பெயரில் அல்லது பெண் குழந்தைகளின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்தி சேரலாம் எனவும் இதில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் உதிர்வு காலம் இரண்டு ஆண்டுகள். அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பாக இருப்பதால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கு அச்சமின்றி இந்த திட்டத்தில் சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.