தவறான ஆதாயம் ஈட்டும் உள்நோக்கத்துடன் சில மோசடியான நபர்களால் போலியான தேர்வு ஆணைகள் வழங்கப்படுவதும், சில வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைனில் வேலை வழங்குவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி அதற்கு பணம் செலுத்துமாறு கோருவதும் தெரியவந்துள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தவறான ஆதாயம் ஈட்டும் உள்நோக்கத்துடன் சில மோசடியான நபர்களால் போலியான தேர்வு ஆணைகள் வழங்கப்படுவதும், சில வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைனில் வேலை வழங்குவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி அதற்கு பணம் செலுத்துமாறு கோருவதும் தெரியவந்துள்ளது. வேலை தேடுபவர்கள் இதுபோன்ற ஏமாற்று வலையில் விழ வேண்டாம். அஞ்சல் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், போலி கையொப்பத்துடன், இந்திய தபால் துறையின் பெயர் மற்றும் லோகோவை, இவர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் அனைவரும் தேர்வு ஆணைகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும். பணியாளர் தேர்வாணையம் / அஞ்சல் துறை மூலம் நடத்தப்படும் தேர்வின் மூலம் தகுதித் தேர்வு/ செயல்முறை மூலம் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையான ஆட்சேர்ப்பு செயல்முறையை இந்திய அஞ்சல் துறை பின்பற்றுகிறது.மேலும் இந்தியா போஸ்ட் நிறுவனம் விண்ணப்பதாரர்கள், வேலை தேடுபவர்கள் ஆகியோரிடம் எந்த வகையிலும் பணம் கேட்கவோ, கோரவோ அல்லது பெறவோ இல்லை.
இதுபோன்ற போலியான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வேலை தேடுபவர்கள் எந்தவொரு விஷயத்திலும் இதுபோன்ற போலி கோரிக்கைகளுக்கு பதிலளிக்கக்கூடாது என்று இந்தியா போஸ்ட் பரிந்துரைக்கிறது. மேலும் நீங்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத சந்தேகத்திற்குரிய அல்லது மோசடியான சலுகைகள் அல்லது நேர்காணல் அழைப்பைப் பெற்றால், தயவுசெய்து அதை அஞ்சல் துறைக்கு vig.tn@indiapost.gov.in மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.
வேலை தேடுபவர்கள் தாங்கள் ஆட்சேர்ப்பு மோசடியால் பாதிக்கப்பட்டதாக நம்பினால், அவர்கள் உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கையை நாடவெண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு மோசடி தகவல் தொடர்பு அல்லது அதன் விளைவுகளிலும் செய்யப்பட்ட பிரதிநிதித்துவத்திற்கு அஞ்சல் துறை எந்தப் பொறுப்பும் ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.