வரும் மார்ச் 24-ம் தேதி தி.நகரில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 24.03.2023 அன்று மாலை 4.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடன் அனுப்பலாம்.
பொதுமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு, பணப்பரிவர்த்தனை சான்றிதழ் தொடர்பான புகார்களும் அனுப்பலாம். புகார்களை தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அனுப்பலாம்.