fbpx

”போஸ்டர் அடி… அண்ணன் ரெடி”..!! தளபதி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நா ரெடி’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அப்பாடல் வெளியானது. இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்தப் பாடலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற அதே நேரத்தில், இப்பாடல் காப்பி சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதாவது அஜித் நடித்த திருப்பதி படத்தில் இடம்பெறும் திருப்பதி வந்தா திருப்பம் பாடலின் டியூனும், நா ரெடி பாடலின் டியூனும் ஒன்றாக இருப்பதாக கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலில் விஜய் அரசியலில் களமிறங்கும் வகையில் உறுதிப்படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

”அண்ணா வா தம்பிகளுக்காக வா” என ரசிகர்கள் அழைப்பது போலவும் அதற்கு விஜய் ‘நா ரெடி தான் வரவா’ என பதிலளிப்பது போலவும் வரிகள் அமைந்துள்ளன. மேலும் “போஸ்டர் அடி… அண்ணன் ரெடி, எவன் தடுத்தாலும் என்ர ரூட்டு மாறாது” என்றும் இடம்பெற்றுள்ளது. இது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அச்சாணி போடுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

ச்சை மனுஷனாய்யா நீயெல்லாம்……? சொந்த மனைவியை 10 வருட காலமாக அடுத்தவர்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கணவர் மனைவி எடுத்த அதிரடி முடிவு…..!

Fri Jun 23 , 2023
பிரான்ஸ் நாட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து அவரை பல ஆண்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதோடு, இந்த கொடூரமான செயல் கடந்த 10 வருட காலமாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் 92 முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். 26 முதல் 73 வயது வரையில் உள்ள 51 பேர் கைது செய்யப்பட்டு, […]

You May Like