fbpx

நோட்…! சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு கனமழை காரணமாக ஒத்தி வைப்பு…!

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அக்டோபர் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு கனமழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 490 கி.மீ தொலைவில் இது நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கரையை கடக்கும்.

கரையைக் கடக்கும்போது தரைக் காற்றின் வேகம் சுமார் 35 முதல் 55 கி.மீ வேகத்தில் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக் கூடும். இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அக்டோபர் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு கனமழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பெருநகiர சென்னை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் 2,576 காலியிடங்களை நிரப்புவதற்காக அக்டோபர் 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்த சானறிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு, கனமழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Postponement of certificate verification and interview due to heavy rain

Vignesh

Next Post

10.கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!. எப்போது கரையை கடக்கும்?

Wed Oct 16 , 2024
A depression moving at a speed of 10.km!. When will it cross the shore?

You May Like