fbpx

மீண்டும் தேர்வுகள் ஒத்திவைப்பு!!! அண்ணா பல்கலைக்கழகம் தகவல்…

ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் தேதி மீண்டும் மாற்றப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பட்டது. இதையடுத்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ம் தேதியும், டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்த நிலையில் மீண்டும் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 19 மற்றும் ஜனவரி 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

Kathir

Next Post

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டமா...? மத்திய அரசு தகவல்

Sat Dec 17 , 2022
யூடியூப், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் ஏற்றும் எண்ணம் தற்பொழுது மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது. டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் பொழுது பதில் அளித்த அவர், 2000மாவது ஆண்டின் தகவல் […]

You May Like