செப்டம்பர் 10-ம் தெதி தொடங்கவிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது..
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை (TET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை intha தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது. முதற்கட்ட தேர்வுகள் வருகிற 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு தாள்-1க்கான தேர்வு, செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது..
இந்நிலையில் செப்டம்பர் 10-ம் தெதி தொடங்கவிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.. நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுக்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது..