தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக முழுவதும் மின்னிலயங்களை பராமரிக்கும் பணிக்காக அப்போது மின்தடை செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெரம்பூரில் பெரியார் நகர் 1, 2, 3, 4 ஆவது தெருக்கள், சந்திரசேகர் சாலை, கந்தசாமி சாலையில் மின்தடை செய்யப்படும்.
மேலும் பொன்னேரியில் மாதர்பாக்கம், மாநெல்லூர், கண்ணம்பாக்கம், ஈகுவர்பாளையம், என்.எஸ்.நகர், ராசசந்திராபுரம், 33 கிலோ வாட் மத்சயநாயகி இரும்பு கம்பெனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.