fbpx

சென்னையில் நாளை மின்தடை!… எந்தெந்த பகுதிகள் தெரியுமா?… மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு!

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை (23.12.2023) மின்தடை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் மின்தடை வார நாட்களில் அறிவிக்கப்படுவது வழக்கம். வழக்கமாக தமிழ்நாட்டில் மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மின்சாரம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளில் ஞாயிறு மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது ஞாயிறு ஏதோவது சிக்கல் எழுந்தால் ஒழிய, மற்ற சமயங்களில் மின்சாரம் ரத்து ஆகாது. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமைகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன வரும் சனிக்கிழமை (23.12.2023) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் பகுதியில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரத்தில் கடப்பேரி லட்சுமிபுரம், பிள்ளையார் கோவில் 1 முதல் 3 வது தெரு வரை, நியூ தெரு, சந்திரன் நகர், நாகப்பா நகர், சி.எல்.சி. ஒர்க்ஸ் ரோடு, நியூ காலனி 1 முதல் 6 வது மெயின் ரோடு, 11 முதல் 18 வது குறுக்குத் தெரு, மும்மூர்த்தி நகர், அன்னை இந்திரா நகர், ஜி.எஸ்.டி. ரோடு (பாண்ட்ஸ் முதல் காசநோய் மருத்துவமனை), உமையாள்புரம், அம்பேத்கர் நகர், சோழவரம் நகர், நவமணி தெரு, துர்கா நகர் தெருக்கள் மற்றும் குடியிருப்பு வாரியம் ஆகிய பகுதிகளில் வரும் 23ம் தேதி சனிக்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Kokila

Next Post

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? குஷியில் மாணவர்கள்..!!

Fri Dec 22 , 2023
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாத நிலையில், நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், தூத்துக்குடியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (டிச.22) விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் […]

You May Like