fbpx

இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் இந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது..! முழு விவரம்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், தமிழகத்தின் சில பகுதிகளில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படவுள்ளது.

அதன்படி, சென்னை: சென்னை வடக்கு பகுதிகளான பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகத்திலும், சென்னை தெற்கில் அமைந்துள்ள பம்மல் பகுதி (சிக்னல் அலுவலக சாலை), வெங்கடேஸ்வரா நகர் (பகுதி), மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோயில் 1வது & 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவ சங்கர் நகர், ஈசிடிவி நகர், மல்லியம்மா நகர் ஆகிய இடங்களில் இன்று மின்தடை ஏற்படும்.

திருச்சி : பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை, சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சலபட்டி, அரங்கூர், சிட்கோ நிறுவனம், பெல் நகர், கலைஞர் நகர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஹெச் குவாட்டர்ஸ், ராவுத்தன் மேடு, துவாக்குடி, தண்ணீர் பட்டி, லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னி மங்கலம், வெள்ளனூர், சிறுத்தையூர், மணக்கல், புஞ்சை சங்கந்தி, சென்கல், மும்முடி சோழ மங்களம், ஆதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைக்குடி, பிரிமையக்குடி, நாகையநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அன்னைக்கல்கட்டி, கொளத்துப்பாளையம், பித்ரமங்கலம். மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பெரியபள்ளிபாளையம், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு, ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏலூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையகுளம்புதூர், தலமலைப்பட்டி, காரக்காடு, ஏலூர்பட்டி ஆகிய இடங்களில் இன்று மின்தடை ஏற்படும்.

வேலூர்: ராணிப்பேட்டை, பிஎச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேடிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றுவட்டார பகுதிகள், ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், கலவை, வாலாஜா, ஒழுகூர், தரமநீதி, காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும்.

கோவை: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில், கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும்.

பல்லடம்: எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சப்பாளையம், தொட்டம்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

பெரம்பலூரில், புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் பகுதிகளிலும், தேனியில் பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணா மில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், செங்கல்பட்டில் 110/33-11கிலோவாட்/ஸ்ரீபெரும்புதூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று மின்தடை ஏற்படும் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா..? ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Power outage is going to happen in these parts of Tamil Nadu in a little while..! Full details..!

Kathir

Next Post

குரங்கு அம்மை..!! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அவசர கடிதம்..!! பீதியில் மக்கள்..!!

Fri Sep 27 , 2024
The central government has written an urgent letter to all states and union territories regarding monkey measles.

You May Like