fbpx

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி..

மெக்சிகோவின் மத்திய பசிபிக் கடற்கரையில் நேற்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால், மெக்ஸிகோ நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.. தலைநகரின் மத்திய ரோமா பகுதியின் சில பகுதிகளில், நிலநடுக்கத்தின் வடகிழக்கில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மைக்கோகன் மற்றும் கோலிமா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகில் சுமார் 15 கிமீ (9 மைல்) ஆழத்தில் பதிவானது.. இந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்கரையில் உள்ள மைக்கோகன் மாநிலத்தில் கோல்கோமனுக்கு தெற்கே 59 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவிலும், மெக்சிகோ நகரத்திற்கு மேற்கே பல நூறு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருந்தது.

இதைத்தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 200 மைல்களுக்குள் உள்ள கடலோரப் பகுதிகளில் உள்நாட்டில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.. கடல் மட்டத்திலிருந்து 1 முதல் 3 மீட்டர் (3 முதல் 9 அடி) வரை அலைகள் எழக்கூடும் என்று மெக்சிகோவின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை மையம் வெளியிட்டது.

மேற்கு மாநிலமான கொலிமாவில் உள்ள மன்சானிலோவில் இடிபாடுகளில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மெக்சிகோ சிட்டியில் கடுமையான சேதம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது..

1985 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மெக்சிகோவை தாக்கிய பெரிய பூகம்பங்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.. இந்நிலையில் நேற்றைய தினமும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவில் 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

உறங்கும் முன்பு பால் குடிக்கலாமா ? உடலுக்கு உண்மையிலேயே நல்லதா ?

Tue Sep 20 , 2022
பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியம்தான். ஆனால் அதை எப்போது குடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் அனைவரும் உறங்குவதற்கு முன்பாக பால் குடித்துவிட்டு உறங்குவார்கள். இது உண்மையிலேயே உடலுக்கு நல்லதா ? என்பதை பார்க்கலாம். பாலில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. பாலில் கல்சியம் சோடியம் , புரோட்டீன் , விட்டமின் ஏ, கே மற்றும் பி.12 , கொழுப்பு, […]

You May Like