fbpx

கரீபியன் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு!. அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

Earthquake: கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அண்டை நாடுகள் மற்றும் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரிபியன் கடலில் நேற்று 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6:23 மணிக்கு கடலின் நடுவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரிபியன் கடலை ஒட்டிய தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சர்வதேச சுனாமி தகவல் மையம் சுனாமி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு கரீபியன் கடல் மற்றும் ஹோண்டுராசின் வடக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளில் சுனாமி எதிர்பார்க்கப்படவில்லை என்றும், புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிலநடுக்கத்தால் உருவான “அபாயகரமான சுனாமி அலைகள்”, கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 620 மைல்களுக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

English Summary

Powerful earthquake in the Caribbean Sea!. Recorded at 8 on the Richter scale!. Tsunami warning for neighboring countries!

Kokila

Next Post

மற்றொரு அதிர்ச்சி சம்பவம்...! திண்டிவனம் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை...! குரல் கொடுத்த ராமதாஸ்

Sun Feb 9 , 2025
Student sexually harassed at Tindivanam Government College

You May Like