fbpx

பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்..!! அவரது மகள் யாரென்று இன்று தெரியும்..!! வெளியான பகீர் தகவல்..

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரின் மகள் இன்று நவ.27ஆம் தேதி வெளியே வருவார் எனக்கூறி புயலைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் கெளதமன்.

இறுதிகட்ட ஈழப்போரில், 2009 மே 17ஆம் தேதி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உயிரோடு, நலமுடன் இருக்கிறார். இதை அவரின் குடும்பத்தினர் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என 2023 பிப்ரவரி மாதமே பேசி சர்ச்சையைத் கிளப்பியிருந்தார்உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்.

அவர் பேசியதை எந்தவொரு அமைப்புமே ஏற்காத நிலையில், இப்போது இயக்குநர் கெளதமனும், “பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் நலமுடன் இருக்கிறார்கள்” என அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் கெளதமன் கூறுகையில், ”பிரபாகரனின் மகள் துவாரகா என்னிடம் அலைப்பேசியில் பேசினார். அப்போது, பிரபாகரன் குறித்தும் வினவினேன். அதற்கு அவர் ஒரு நொடி மௌனமாக இருந்துவிட்டு, அப்பாவும், அம்மாவும் நலமுடன் இருக்கிறார் என்றார்.

மேலும் மாவீரர் நாளான இன்று (நவம்பர் 27) மாலை 5.30 மணிக்குமேல் துவாரகா காணொலி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார் என்ற தகவலையும் தெரிவித்தார். துவாரகாவின் வருகையை மத்திய-மாநில அரசுகள் வரவேற்க வேண்டும். அவர் அரசியல் ரீதியாக இயங்கவிருப்பதாகத் தெரிகிறது” என்றார்.

Chella

Next Post

செம வாய்ப்பு...! மாதந்தோறும் ரூ. 20,000 வழங்கப்படும்...! டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Mon Nov 27 , 2023
திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதித்த பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மைய நிா்வாகி பணிக்கு சட்டம், சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் […]

You May Like