fbpx

ரெடி..! 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு…! டிசம்பர் 6-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு…!

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்குபெறும் அரையாண்டு தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 6-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அரையாண்டு தேர்வுக்கான செய்முறைத்தேர்வுகள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வினை நடத்துவது குறித்து அறிவித்து உள்ளார்.

அரையாண்டு தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வுகள், நடத்தப்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மாற்றுத் திறனாளி மாணவர்கள் 10, 11, 12ஆம் வகுப்பில் படித்தால், பொதுத் தேர்வுகள் எழுதும் உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களது விருப்பத்தின் பேரில் செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்தல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும் செய்முறைத்தேர்வுக்குப் பதிலாகச் செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் (Multiple Choice Questions) அடங்கிய வினாத்தாள்கள் வழங்கி செய்முறைத்தேர்வு செய்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளியின் முதல்வர்கள் சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு மையங்கள் அமைத்தல், செய்முறைத் தேர்வு நடத்துவதற்கு முதன்மைக் கண்காணிப்பாளர், புறத்தேர்வாளர்கள் (வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்), அகத்தேர்வாளர்கள் (அதே பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்), திறமையான உதவியாளர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர், குடிநீர் வழங்குபவர் நியமனம் செய்ய வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் போதுமான கல்வித் தகுதியுள்ள திறமையான பணியாளர்களைச் செய்முறைத் தேர்வு நடத்துவதற்கு நியமனம் செய்ய வேண்டும்..

English Summary

Practice test for 10th, 11th and 12th grade students

Vignesh

Next Post

அரசு வேலைக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மாறுவதா?. 'மிகப்பெரிய மோசடி'!. உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Thu Nov 28 , 2024
Converting from Christianity to Hinduism for government job?. 'Biggest Fraud'!. The Supreme Court condemned!

You May Like