2019-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகர் மற்றும் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன். இவரது முதல் படமான கோமாளி இவருக்கு நல்ல பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது. இதனால், இவரது அடுத்த படத்திற்கு மக்கள் ஆர்வம் கட்டினர். இவரது லவ் டுடே படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
எதார்த்தமான கதைகளால் பலரின் கவனத்தை பெற்ற பிரதீப், நடிப்பிலும் சிறந்து விளங்கினார். ஒரு சில படங்களிலேயே பெரிய அளவில் பிரபலம் ஆன பிரதீப் ரங்கநாதன் தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இவரது இந்தப் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், தனக்கு கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்றை நடிகர் மற்றும் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது, 2012-ம் ஆண்டு பி.டெக் படித்த பிரதீப், தேர்வில் பிரதீப் செய்த காரியத்திற்கு அவரது ஆசிரியர் அளித்த அறிவுரையை தற்போது பகிர்ந்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் பி.டெக் படிக்கும்போது தேர்வில் பதில் எழுதாமல் கதை எழுதி வைத்திருக்கிறார். அதற்கு அவரது ஆசிரியர் “மை டியரஸ்ட் பிரதீப்.. தயவு செய்து கதை எழுதாதே” என பேப்பரிலேயே குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர்.
2012ல் நடந்த இந்த சம்பவத்தின் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கும் பிரதீப் ரங்கநாதன், “டீச்சர் என்னை கதை எழுத வேண்டாம் என கூறினார். ஆனால் நான் அதையே என் தொழிலாக மாற்றிக்கொண்டேன்” என குறிப்பிட்டு இருந்தார்.