மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரைப்பட துறையைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய திரைத்துறையில் மிக பிரபலமானவரும் வில்லன் நடிகருமான நடிகர் பிரகாஷ் ராஜ் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது, மக்கள் என்றும் உங்களுடன் இருப்பார்கள் , நீங்கள் ஒரு பெரிய வேலை செய்தீர்கள். மகாராஷ்டிராவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை புரிந்துகொண்டு மக்கள் உங்களுடன் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சாணக்கியர்கள் இன்று லட்டு சாப்பிடலாம் ஆனால் உங்கள் தூய்மை என்றென்றும் இருக்கும் என்று பிரகாஷ் ராஜ் ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார்.
பிரகாஷ்ராஜை தவிர்த்து, நடிகை ஊர்மிளா மடோன்கரும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த்துள்ளா. கொரோனா ஊரடங்கு காலத்தில், உத்தவ் தாக்கரேவின் தலைமைப் பண்புகளைப் பாராட்டி அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர், ஒரு தலைவராக உங்கள் பணி, மகாராஷ்டிராவை வகுப்பு வாத வெறுப்பு மற்றும் மதவெறியிலிருந்து விலக்கி வைத்துள்ளது.
உங்கள் தலைமை ஒரு முன்மாதிரி, பாரபட்சமற்ற, தைரியமான மற்றும் பொறுப்புள்ள வெளிப்படையான நிர்வாகத்தை நீங்கள் அளித்தீர்கள் என்று பதிவு செய்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின்அரசியல் நெருக்கடி காரணமாக மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.